நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் வளர்ச்சியடையும் என மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள செப்டெம்பர் மாத பொருளாதார மறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘இரண்டு மாத பணவீக்க சரிவுக்குப் பின்னர் செப்டெம்பர் மாதம் நுகர்வோர் விலை பணவீக்கம் அதிகரித்தது.
மழையினால் காய்கறி விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே இதற்கு காரணம்
பயிர் சாகுபடி, நீர்த்தேக்கங்களில் காணப்படும் போதியளவு நீர், தானியம் கையிருப்பில் இருத்தல் போன்ற காரணங்களால் உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க உதவும்.
கடந்த செப்டெம்பர் மாத இறுதியில், அந்நிய செலாவணியின் மூலம் 700 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக கையிருப்பில் இருந்தது.
இவ்வாறு அந்நிய செலாவணியை கையிருப்பில் வைத்திருக்கும் முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அதன்படி, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
அப்படிப் பார்க்கையில் மொத்த இந்தியாவின் பொருளாதார செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது.
இதன் காரணமாக நிகழ் நிதியாண்டில் பொருளாதாரம் 7 சதவீதம் வரையில் உயர்வடையும் எனக் கூறப்படுகிறது.