ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா?

ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?

கேப்டனாக சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தாலும், வீரராக சொதப்பியதாக விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

 

கோலியால முடியல.. சூர்யகுமார் சம்பவம்..

 

இந்திய கிரிக்கெட் அணி எத்தனையோ சிறப்பான கேப்டன்களை கண்டிருந்தாலும், அவர்கள் அனைவராலும் ஐசிசி போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியவில்லை. கபில் தேவ், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா ஆகியோரால் மட்டுமே சர்வதேச போட்டிகளில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடிந்தது. அந்த எலைட் லிஸ்டில் தற்போது சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார். அதேநேரம், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி போன்ற ஆகச்சிறந்த வீரர்கள் இந்திய அணி இன்று எட்டியுள்ள நிலைக்கு கேப்டனாக மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர். அவர்களால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமாக இருந்தாலும் வரலாற்றில் மறுக்க மற்றும் மறைக்க முடியாத லெஜண்டுகளாக தொடர்கின்றனர். அந்த அங்கீகாரம் சூர்யகுமாருக்கு கிடைக்குமா? என்றால் அது சந்தேகமே..!

 

ஸ்கை லெஜண்டாவது சந்தேகமே..!

 

ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த இந்திய கேப்டன்கள் அனைவருமே மிகவும் இக்கட்டான மற்றுமே வாய்ப்பே இல்லை என்ற சூழலில், அரிய நிகழ்வுகளை நடத்தி காட்டினர். பழையை தோல்விகளில் இருந்து கிடைத்த பாடங்கள் மூலம், இந்திய அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையை மாற்றி சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அத்தகைய பெரிய மாற்றம் எதையும் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி காணவில்லை. கபில்தேவ், தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பைகளை வென்றபோது, கேப்டனாக வழிநடத்தியது மட்டுமின்றி, வீரர்களாகவும் தங்களது பங்களிப்பை வழங்கினர். ஆனால், அத்தகைய நினைவுகூறத்தக்க பங்களிப்பு எதையுமே வழங்காமல், கேப்டனாக மட்டுமே சூர்யகுமார் வென்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில் அவரது தாக்கம் என்பது அணியில் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.

 

இந்திய கேப்டன்களின் சம்பவம்..

 

இந்திய அணி 1983ம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்த கபில் தேவ், அந்த தொடரில் 303 ரன்களை குவித்து இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வரலாறு படைத்தார். அதோடு, 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். குறிப்பாக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியில் 175 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது ஆரம்பத்தில் பேட்ஸ்மேன் ஆக சொதப்பினாலும், முக்கியமான இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி 91 ரன்களை குவித்து பட்டத்தை வென்றது இன்று வரை தோனியின் மறக்கமுடியாத இன்னிங்ஸ் ஆக உள்ளது. அதேநேரம், விக்கெட் கீப்பர் என்ற முறையில் சிறந்த பங்களிப்பையும், கேப்டனாக அபாரமாக வழிகாட்டியும் அணியை வெற்றி பெற செய்தார்

2007ம் ஆண்டு முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் களமிறங்கியபோது, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், கிடைத்த வீரர்களை திறம்பட கையாண்டு தோனி கோப்பையை வென்றது, ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வரலாற்றை உருவாக்கினார். பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் பவுல் அவுட் முறையின்போது கீப்பராகவும் சரி, இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவை பந்துவீச செய்ததும் சரி, தோனி ஏன் லெஜண்டானார் என்பதற்கான சான்றுகளாக மாறிவிட்டன

கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்ற போது, கேப்டனாக சக வீரர்களை அபாரமாக வழிநடத்தியதோடு, வீரராகவும் ரோகித் சர்மா முன்மாதிரியாக திகழ்ந்தார். 257 ரன்கள் விளாசி அந்த தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்த வீரராக உருவெடுத்தார். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசி அசத்தினார்

2023ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும், கேப்டனக தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றியை ஈட்டியதோடு, 597 ரன்களை விளாசி அந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரராகவும் உருவெடுத்தார்.

இந்தியா வென்ற ஐசிசி உலகக் கோப்பைகள்

 

போட்டி கேப்டன் ஆண்டு எதிரணி

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கபில் தேவ் 1983 மேற்கிந்திய தீவுகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை தோனி 2007 பாகிஸ்தான்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோனி 2011 இலங்கை

ஐசிசி டி20 உலகக் கோப்பை ரோகித் சர்மா 2024 தென்னாப்ரிக்கா

ஐசிசி டி20 உலகக் கோப்பை சூர்யகுமார் 2026 நியூசிலாந்து

ஸ்கேம் செய்த சூர்யா – கேப்டன் பதவி தப்புமா?

 

சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமைத்துவ பண்பு மூலம் அணியின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரசிகர்களால் உணர முடியவில்லை. பெரிய அளவில் பேட்டிங்கை மட்டுமே நம்பி அணி களமிறங்குவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில், 9 போட்டிகளில் விளையாடி 242 ரன்களை மட்டுமே சேர்த்தார். அதில் 84 ரன்கள் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சேர்த்ததாகும். மற்றபடி ஒரு வீரராக குறிப்பாக இக்கட்டான சூழலில் அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையிலும், நினைவில் கொள்ளும் வகையிலும் எந்தவொரு பங்களிப்பையும் அவர் வழங்கவில்லை. இதே ஃபார்ம் தொடர்ந்தால் கேப்டன் பதவியை மட்டுமே கொண்டு, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் தொடர்வாரா என்பது சந்தேகமே..

Recommended For You

About the Author: admin