உலகக்கோப்பை வெற்றி..! திடீரென வெடித்த சண்டை..

உலகக்கோப்பை வெற்றி..! திடீரென வெடித்த சண்டை..

ரோகித் சர்மாவிடம் கத்திய மனைவி. கடைசியில் ட்விஸ்ட். வீடியோ வைரல்..!!

2026 டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக, “இந்திய அணி வரலாற்றை மாற்றும், வரலாற்றை மீண்டும் உருவாக்கும்” எனத் தனது விளம்பரப் படத்தில் கேப்டன் ரோகித் சர்மா முழங்கியிருந்தார்.

 

அந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் வகையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் கொண்டாட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

 

இருப்பினும், இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில், ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகா சஜ்தே இடையிலான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தின் போது, ரித்திகா சஜ்தே தனது கணவர் ரோகித் சர்மாவைக் கூப்பிட்டு ஏதோ தீவிரமாகப் பேசுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

 

ரித்திகாவின் முகபாவனை மற்றும் அவர் பேசும் விதம், இருவருக்கும் இடையே ஏதேனும் வாக்குவாதம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே கிளப்பியுள்ளது. மைதானத்தில் இருந்த கடும் இரைச்சல் காரணமாக, அவர் என்ன பேசுகிறார் என்பது தெளிவாகப் புரியவில்லை என்றாலும், ரோகித் சர்மா அதை அமைதியாகக் கவனிப்பது மட்டும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். எனினும், வீடியோவின் இறுதிப் பகுதியில் ரித்திகா மீண்டும் புன்னகைப்பதைக் காண முடிகிறது. இதனால், இது ஏதேனும் தீவிரமான வாக்குவாதமா அல்லது மைதானத்தில் இருந்த இரைச்சலைத் தவிர்க்க, சத்தமாகப் பேசுவதற்காக அவர் அவ்வாறு செய்கிறாரா என்பது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் எது எப்படியோ, இந்தியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, மைதானத்தில் நடந்த இந்தச் சிறிய நிகழ்வு தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended For You

About the Author: admin