ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் வட்ஸ்அப் முடக்கப்பட்டுள்ளது.
அவரது வட்ஸ்அப்பிலிருந்து அவசர உதவி கோரி நிதி மோசடி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில், எனது வட்ஸ்அப் கணக்கு கணினி மோசடிக் கும்பலால் முடக்கப்பட்டு அதன் ஊடாக உதவி வழங்கும் கோரிக்ககைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் எவரும் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம். இது தொடர்பில் தொலைபேசி ஊடாக மட்டும் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.