காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) அறிக்கை ஒன்றில், “ஒரு வருடகாலத்திற்கு பின்னர்” தெற்கு காசா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையில் சின்வாரைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் குறித்து வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இயங்கி வரும் 828வது படைப்பிரிவைச் சேர்ந்த இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் “மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றுள்ளனலர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் போது அதில் யாஹ்யா சின்வாரும் அடங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.