237 ஆவது திரைப்படம்: ரெடியாகும் கமல்

இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வந்தார் நடிகர் கமல் ஹாசன்.

தற்போது இந்தியன் 3ஆம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.

கமல்ஹாசனின் 237ஆவது திரைப்படமான இப் படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டைப் பயிற்சியாளர்கள் இயக்குவதால் இது முழு நீள சண்டைப் படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இப் படத்துக்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம் கமல்ஹாசன்.

Recommended For You

About the Author: admin