மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புதன்கிழமை (25) மாலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று மாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி பரிசோதித்த விசேட பொலிஸ் பிரிவினருடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசேட அதிகாரிகளே 2000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய நிலையில் கையும் மெய்யுமாக கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று மாலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று மாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி பரிசோதித்த விசேட பொலிஸ் பிரிவினருடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசேட அதிகாரிகளே 2000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய நிலையில் கையும் மெய்யுமாக கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin