LPL 2024: இறுதி பந்தில் ஜப்னா கிங்ஸ் வெற்றி

நடப்பு லங்கா பிரீமயர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர் ஆகிய அணிகள் இன்று மோதின.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

என்றாலும், ஜப்னா அணி முதலில் பந்துவீச்சையே தெரிவுசெய்தது.

காலி அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் ஜப்னா அணி தோல்வியை சந்தித்திருந்த நிலையிலேயே இன்றைய போட்டியில் களங்கண்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை சிக்ஸர் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

192 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

இறுதி பந்தில் சிக்ஸர் ஒன்றை விளாசியே கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஜப்னா கிங்ஸ் அணிக்காக அவிஸ்க பெர்ணான்டோ 80 ஓட்டங்களையும், சரித்த அசலங்க 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Recommended For You

About the Author: admin