வன்னியில் களைக்கட்டும் நுங்கு விழா

வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) மன்னாரில் நடைபெற்றது.

வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்குவின் பயன்பாடுகள் அதிகரித்துவிடும்.

எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரமும் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக நுங்கு திருவிழாவில் சிறப்பாக இடம்பெற்றது.

இதில், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும், இந்த நுங்கு திருவிழாவில் பனை மரத்தின் தேவை குறித்தும் பனை மரத்தினால் பெறப்பட கூடிய பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: admin