இரத்தினபுரியில் பெண்தொழிலாளர் மீதான தாக்குதல்: அறிக்கை கோரும் சாகல

இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளர் இணைந்து பெண் தோட்ட தொழிலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்புகளுக்கான ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க தீர்மானங்களை எடுக்கும் மூவர் கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார், சாகல ரத்நாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சாகல ரத்நாயக்க, உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும் , இது தொடர்பில் அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்குமாறும் அறிக்கையொன்றைகோருமாறும் ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்புகளுக்கான ஆலோசகர் சமன் ரத்னப்பிரியவுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதற்கமைய அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

gdv

Recommended For You

About the Author: admin