யாழில் தென்னிந்திய நட்சத்திரங்களுடன் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி..!

தென்னிந்திய திரைத்துறை பின்னணிப் பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பல தென்னிந்தியப் பிரபலங்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சியுடனான நட்சத்திர கலை விழா, யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான ரம்பா, ஐஸ்வர்யா ராஜேஸ், யோகி பாபு மற்றும் சின்னத்திரைப் பிரபலங்கள் பலரும் பங்குகொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக, VIP மற்றும் VVIPகளுக்கு மாத்திரம் அனுமதிக் கட்டணம் அறிவிடப்படுவதுடன், ஏனைய அனைவருக்கும் இலவசமாக கலந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin