‘யாழ்ப்பணத்தில் உயர் வர்கத்தினர்தான் குழப்பாவாதிகளாம்’ என்கிறார் சரத் வீரசேகர

“இராணுவத்தில் இருந்த போது யாழ்ப்பாணத்தின் பலப் பகுதிகளிலும் சேவை செய்துள்ளேன். தனிப்பட்ட ரீதியில் தமிழ் மக்களுக்கு நான் இரத்த தானம் செய்துள்ளேன்.

இன்று தமிழ், தமிழ் மக்கள் என பேசிவரும் உயர்வர்கத்தினர் தமிழ் மக்களுக்காக இரத்தம் கொடுத்திருக்கின்றார்களா? என கேட்க விரும்புகின்றேன்.

வடக்கில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் கொடியை தவிர்த்துவிட்டு இன்று நாட்டின் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர். இதுவே உண்மையான சுதந்திரம் ஆகும்.”

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்கின்றேன்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.

இன்று தான் யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் நேரில் பார்வையிட்டேன். அதுதான் உண்மையான நல்லிணக்கம்.

ஆனால், தமிழ் மக்களின் இந்த சுதந்திரமான நிலைமையினை குழப்புவதற்கு உயர் வர்க்கத்தினர் சூழ்ச்சி செய்து வருகின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin