நாட்டின் 75-ஆவது குடியரசு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் கடமை பாதையில் காலை 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிடுகிறார்.
இதைத் தொடர்ந்து விஜய் சவுக் முதல் கடமை பாதை வரை முப்படை வீரர்களின் கோலாகல அணிவகுப்பு நடைபெற உள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா, ஜனநாயகத்தின் தாய் இந்தியா ஆகிய தலைப்புகளில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வரவுள்ளன.
விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கலந்துகொள்கிறார். குடியரசு தின விழாவையொட்டி டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.