2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான திகதிகள் இன்னும் உத்தியோப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் போட்டிகள் மார்ச் அன்று ஆரம்பிக்கப்படும் என்று உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் (மார்ச் 17 ) 5 நாட்களுக்கு பின்னர் 17 ஆவது ஐ.பி.எல். போட்டிகளை மார்ச் 22 அன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, ஐ.பி.எல். போட்டிகள் மே 26 ஆம் திகதி அன்று நிறைவு பெறும்.
உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் முதல் போட்டி ஜூன் 05 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.
Cricbuzz அறிக்கையின்படி, இது இந்திய தேர்தல் ஆண்டாக இருந்தாலும், போட்டிகள் முழுவதையும் சொந்த ஊரில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு போட்டிகள் மாற்றப்பட்டிருந்தாலும், முழு ஐ.பிஎல் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் பிசிசிஐ நம்பிக்கை கொண்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்திய பாராளுமன்ற தேர்தல் திகதியின் அறிவிப்பினை அடிப்படையாக கொண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான திகதியை பிசிசி ஐ உத்தியோப்பூர்வமாக தீர்மானிக்கும்.