நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் இரண்டாம் கட்டமாக, 9 மாதம் முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு இன்று (20) மற்றும் நாளை (21) ஆகிய இரு தினங்களில் தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த முடியுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட தட்டம்மை நோய்த்தடுப்பு திட்டத்தை மேலும் செயல்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin