தாய்லாந்து நாட்டின் மன்னராட்சியை அவமதித்து விமர்சித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் தாய்லாந்தில் இவ்வாறான கடுமையான தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அரசியல் உரிமை ஆர்வலரான சியாங் ராய் மாகாணத்தை சேர்ந்த 30 வயதான மோங்கோல் திரகோட் என்பவர் இணையத்தள ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
2023 ஆம் ஆண்டு மன்னரின் உருவத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்காக நீதிமன்றம் அவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தின்ம் 12 க்கும் மேற்பட்ட சட்ட மீறல்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு மேலும் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உலகில் மிகக் கடுமையான அரச சட்டங்களைக் கொண்ட நாடு தாய்லாந்து. மன்னர், ராணி மற்றும் அவர்களின் வாரிசுகளை விமர்சித்தால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்