பல போலி நாணயத்தாள்களுடன் வேன் சாரதி ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மெதமுலன பகுதியில் இருந்து சிவனெளிபாத மலைக்கு யாத்ரீகர்கள் குழுவுடன் நல்லதண்ணி பகுதிக்கு வந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் பதினொன்றும், 500 ரூபா போலி நாணத்தாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
வாடகை அடிப்படையில் வேனில் ஆட்களை ஏற்றிச் சென்ற போது, தனது வேனில் பயணித்தவர்கள் குறித்த நாணயத்தாள்களை வழங்கியதாகவும், இது போலி நாணயத்தாள்கள் என தான் அறிந்திருக்கவில்லை என்றும் சந்தேக நபர் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கைது செய்யப்பட்ட நபரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.