ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இதனால்,பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளன.
ஈரான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்ககப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களில் மூன்று பெண்களும் நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதி மீது நேற்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ்-உல்-அதில் போராளி குழுவின் முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
பலுசிஸ்தானில் புதன்கிழமை ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று சிறுமிகள் பலத்த காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு ஜெய்ஷ்-உல்- போராளிக்குழுவின் தளங்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையினர் (IRGC) தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையில் தமது படையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையினர் கூறியுள்ளனர்.
ஈரான் தனது வான்பரப்புக்குள் மேற்கொண்ட இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவதை ஏற்க முடியாது என எச்சரித்துள்ளது.