பெண் ஊழியர்களை தாக்கிய மருத்துவர் கைது

இரண்டு கனிஷ்ட பெண் ஊழியர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறப்பு மருத்துவ நிபுணரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறும் விடுதிக்கு பொறுப்பான மருத்துவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் தனியார் வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினட் நடைபெற்ற பணிப்புறக்கணிப்பில் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் ஊழியர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் கலந்துக்கொண்டதால், மருத்துவருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன் போதே மருத்துவர் பெண் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட கனிஷ்ட ஊழியர்கள் சேவையில் இருந்து விலகி, இன்று அதிகாலை 3 மணி முதல் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin