உலகெங்கிளும் உள்ள தமிழ் மக்கள் இன்றைய தினம் தைப்பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வைகயில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
நல்லூர் ஆலயத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடு
தமிழர் திருநாளாம் தை பொங்கல் தினமான இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நல்லிணக்க தைப்பொங்கல்
யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா
திங்கட்கிழமை(15) இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல்
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.
வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்தியர் யமுனானந்தா, வைத்தியர்கள் , தாதியர்கள் , நிர்வாக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்
வடமாகாண ஆளுநர் செயலக பொங்கல் விழா
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.