சிவில் விமான சேவைகள் அதிகாரி கொடூர படுகொலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்காவிலிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​காரில் வந்த சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், படுகாயமடைந்த அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin