பங்களாதேஷ் பரிதாபம்: ஆப்கான் அபார வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் அணி நுழைந்தது.

Recommended For You

About the Author: webeditor