உலக நீரிழிவு தினம் இன்று: யாழ். போதனா வைத்தியசாலையில் இலவச பரிசோதனை

யாழ். மாவட்டத்தில் 20 சதவீதமானவர் களுக்கு நீரிழிவு நோய்த் தாக்கம் உள்ளது என நீரழிவு சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.
யாழ்.மாவட்ட நீரிழிவு கழகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றின்  ஏற்பாட்டில்  உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் நடமாடும் இலவச பரிசோதனை சேவை இன்று(14-11-2023) யாழ். போதனா வைத்தியாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் R.T.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எஸ். யமுனானந்தா கலந்துகொண்டு இலவச பரிசோதனை சேவையினை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் நிபுணர் கலாநிதி R.T.அரவிந்தன் கருத்து தெரிவிக்கையில்:
யாழ். மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய்த் தாக்கம் காணப்படுகின்றது. மேலும், கடந்த இரண்டு வருடங்களாக  கொரோனா தொற்று காலத்தில் இளைஞர்கள் மட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இதில் தற்போது 35,000 இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்- என்றார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பதவி நிலை வைத்தியர்கள், நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் வைத்தியர்கள், மருத்துவபீட மாணவர்கள்,யாழ். மாவட்ட நீரிழிவு கழக தலைவர் மைக்கல் றொபேட் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN