லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் பட தயாரிப்பு நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து. இதனை சிறப்பாக கொண்டாட தயாரிப்பு நிறுவனமான, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ முடிவு செய்துள்ளது.
அதன்படி நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. விழாவில் 6 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரு உள்விளையாட்டு அரங்க பராமரிப்பாளர்களிடமும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. எனினும் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு ஆடியோ வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்திருந்தது.
தற்போது வெற்றி விழா கொண்டாடப்பட இருப்பதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.