இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா காட்டமாக விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சிந்த்வாரா மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேச மக்கள் அதிக இடங்களை கொடுத்து 2வது முறையாக மோடியை பிரதமராக தேர்வு செய்ததாகவும், அவர் அமைதியாக சென்று ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியதாகவும் கூறினார்
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நாட்டின் வளர்ச்சியை புரிந்து கொள்வார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.