விக்ரம் நடிப்பில் புதிய திரைப்படம்!

விக்ரம் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை சித்தா படத்தின் இயக்குனர் SU.அருண்குமார் இயக்குகிறார் இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். அந்த திரைப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சேதுபதி என்ற திரைப்படத்தை மீண்டும் இயக்கினார். அந்தப் படம் கமர்சியலாக வெற்றியடைந்தது.

இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய சிந்துபாத் படம் வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் சித்தார்த் நடிப்பில் சித்தா என்ற படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான அந்த திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்தது.

இந்த நிலையில் அருண்குமார் தற்போது நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. மேலும் அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

அருண்குமார் இயக்கிய முதல் மூன்று படங்களில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி, தற்போது அவருடைய இயக்கத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம், விஜய் சேதுபதி, அருண்குமார் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

 

Recommended For You

About the Author: admin