விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி… வைரலாகும் போஸ்டர்..

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதேபோன்று டீசர் வெளியீட்டு தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சுமார் ஓராண்டாக தங்கலான் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரை நவம்பர் 1ஆம் தேதி வெளியிடுகிறது படக்குழு.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் விக்ரம் இந்த படத்திலும் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தங்கலான் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ராஜமவுலி, ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் வரவேற்பை பெற்றது.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Recommended For You

About the Author: admin