நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 8900 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆறு மாவட்டங்களில் 2,373 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,974 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, பதுளை, கம்பஹா, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், திடீரென ஏற்பட்ட வெள்ள நிலைமை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 1,152 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 70 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.