தென்சீனக் கடலில் பதற்றம்: அமெரிக்க போர்க்கப்பலை பின்தொடர்ந்த சீன கடற்படை! 

தென்சீனக் கடலில் பதற்றம்: அமெரிக்க போர்க்கப்பலை பின்தொடர்ந்த சீன கடற்படை!

பிலிப்பைன்ஸ் கடும் எதிர்ப்பு தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய சபினா ஷோல் (Sabina Shoal) கடல் பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா குற்றம் சுமத்தியுள்ளதுடன்,

 

அதனைப் பின்தொடர்வதற்காகத் தனது கடற்படையையும் களமிறக்கியுள்ளது.

 

அமெரிக்காவின் ‘யூ.எஸ்.எஸ் சார்லஸ்டன்’ (USS Charleston) போர்க்கப்பல் எவ்வித முன் அனுமதியும் இன்றி இப்பகுதிக்குள் நுழைந்ததாகவும்,

 

இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதால் உடனடியாகத் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் பெய்ஜிங் எச்சரித்துள்ளது.

 

சீனாவின் இந்தக் குற்றச்சாட்டைப் பிலிப்பைன்ஸ் உடனடியாக நிராகரித்துள்ளது. சர்வதேச கடல் எல்லை வழியே சட்டபூர்வமான போக்குவரத்தை மேற்கொள்வதற்கு

 

எந்தவொரு நாட்டிடமும் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்று பிலிப்பைன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இரு நாடுகளும் உரிமை கோரி வரும் இந்தச் சபினா ஷோல் பகுதிக்கு அருகே, கடந்த மாதம் சீனா மற்றும்

 

பிலிப்பைன்ஸின் கடல் ரோந்துக் கப்பல்களுக்கு இடையே கடுமையான மோதல் (collision) இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அமெரிக்கப் போர்க்கப்பலின் நுழைவு அப்பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

இதேவேளை, தைவானால் தடைசெய்யப்பட்ட பிரடாஸ் தீவுகளுக்கு (Pratas Islands) அருகேயுள்ள கடல் பகுதிக்குள் சீனக் கடலோரக் காவல்படையின் கப்பல் அத்துமீறி நுழைந்ததை அடுத்து,

 

அங்கு மற்றுமொரு முறுகல் நிலை பதிவாகியுள்ளதாகத் தைவான் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin