முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
கஹவத்தை துப்பாக்கிச் சூட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இவ்வழக்கின் மீதான விசாரணைக்கு அவர் சமூகமளிக்கவில்லை.
அவர் வெளிநாடு சென்றுள்ளதாகச் சட்டமா அதிபர் தரப்பு அறிவித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஊடாக பிடியாணையைச் செயற்படுத்தி, பொலிஸ்மா அதிபரை உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது. ஏனைய இரு பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

