யாழ். பொது நூலகத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையில் இன்றையதினம்  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN