அமைச்சர் டக்ளஸ் கருத்தை தமிழ் கட்சிகள் ஏற்றமை வரவேற்கத்தக்கது: EPDP

பல வருடகாலமாக   ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 இன் அவசியத்தை கூறிவந்த நிலையில்  தற்போது தமிழ் கட்சிகள் அதனை ஏற்று இந்தியாப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடையம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக செயலாளர் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
13 வது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளி என எமது கட்சியின் செயலாளர் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளார்.
அக்கால பகுதியில் சில தமிழ் அரசியல் தலைமைகள் 13 வது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாக ஏற்காவிட்டாலும் தற்போது அதன் தார்பரியத்தை உணர்ந்துள்ளனர்.
13ஆவது திருத்தத்தை ஆரம்ப புள்ளியாக கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்களை முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நிலையில் யாழ் மாவட்ட சிவில் அமைப்பினரும் கடிதத்தை யாழ் இந்தியத் துணை தூதரகத்தில் கையளித்துள்ளனர்.
ஆகவே 13 தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனமான கருத்தை தமிழ் காட்சிகளும்  சிவில் சமூகத்தினரும் ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்க விடையம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN