அமெரிக்காவில் நண்பர்களை பார்க்க சென்ற ஐவருக்கு நிகழ்ந்த சோகம்!

அமெரிக்க நாட்டில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா – சார்ல்ஸ்டன் எஸ்.சி. பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் கிழக்கு பென்சில்வேனியாவுக்கு தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இதில் அந்த குடும்பத்தினர் சிக்கி உள்ளனர். அவர்களில் தந்தை, 4 வயது மகன் மற்றும் பாட்டி தப்பியுள்ளனர். தாயார் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என அப்பர் மேக்பீல்டு நகர காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கின்றது.

இதேவேளை, அந்த குடும்பத்தின் 2 வயது சிறுமி மற்றும் 9 மாத குழந்தையை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை.

அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor