வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 29 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 29 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR )பிரான்ஸ்- இலங்கை பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் துணைவி பகுதியிலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய 29 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக, குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபா படி(2000)மொத்தம், ஐம்பத்து எட்டாயிரம்(58000.00)பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்(22/06/2023) அன்று,துணைவி கலைவாணி சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான  ந.விந்தன் கனகரட்ணம், சமூக சேவையாளரும் அறக்கட்டளையின் ஆலோசகருமான இ.மயில்வாகனம்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை கிளையின் நிர்வாகசபை உறுப்பினரும் பொறியியலாளருமான சா.தவசங்கரி,துணைவி கலைவாணி சனசமூக நிலைய தலைவர் டேவிட் அன்ரனி ஜோய்,செயலாளர் செல்வராசா கெளசிகா,மாதர் சங்க செயலாளர் அ.புஸ்ப்பலலிதா ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN