யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை – சித்தன்கேணி – துரட்டிப்பானை அம்பாள் ஆலயத்துக்கு அருகே புனரமைக்கப்பட்ட தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

புனரமைக்கப்பட்ட குளம் யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவனால் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
சங்கானை தெற்கு கமக்கார அமைப்பின் ஆதரவுடன் உலக சித்தன்கேணி ஒன்றிய மக்களின் நிதி அனுசரணையுடன் ப்ரத்யங்கிரா அறக்கட்டளையால் இந்தக் குளம் புனரமைக்கப்பட்டது.






