தொண்டைமானாற்றில் வீடு கட்ட அனுமதி எடுத்து கிறிஸ்தவ சபைக்கூடம்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் புனிதத் தன்மையை கெடுப்பதோடு, இலங்கை வாழ் இந்து மக்களின் மனதில் மத வன்முறை எண்ணத்தினை தோற்றுவிக்கும் வகையில் கோவிலின் பின் வாயிலிற்கு எதிரே, தொண்டைமான் ஆற்றின் மறுபுறத்தில் ‘வீடு கட்ட என்று அனுமதி எடுத்து’ கிறிஸ்தவ சபைக்கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்ற தகவலை அறிந்த சிவசேனை மற்றும் உருத்திர சேனை தொண்டர்கள் இன்றைய தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை செயலாளரை சந்தித்து முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து மத வன்முறையைத் தூண்டும் இந்த கட்டடத்திற்கு தடைவிதிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதேச சபையினர் உறுதியளித்துள்ளனர்.

சந்நிதியானின் புனிதத்தினை கெடுக்கும் வகையில் குறித்த கட்டடத்தில் கிறிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறுமாயின் அதற்கு எதிரான மேலதிக அறவழிப்போராட்டங்களை உருத்திர சேனை நடத்தும்.

வீடு கட்ட என்று அனுமதி வாங்கிவிட்டு சர்ச்சு கட்டும் சதிவேலையை முதன்முதலில் அம்பலப்படுத்திய வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இராமநாதன் ஐங்கரன் அவர்களுக்கும் இந்த தருணத்தில் எமது நன்றியை கூறுகின்றோம்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN