தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட பொறுப்பாளர் தீபன் திலீசன் உள்ளிட்டோர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.