நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்குமென அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் 67 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோய் பரவுதற்கான அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.