பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR ) பிரான்ஸ் – இலங்கை பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் நெடுந்தீவுப் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய 53 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவியாக குடும்பம் ஒன்றிற்கு 2000 ரூபா படி மொத்தம் ஒரு லட்சத்தி 6,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் (10/06/2023) வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், சமூக சேவையாளரும் அறக்கட்டளையின் ஆலோசகருமான இ.மயில்வாகனம், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை கிளையின் நிர்வாக சபை உறுப்பினரும் பொறியியலாளருமான சா.தவசங்கரி ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.