யாழில் இளம் பெண்களுடன் தனிமையில் இருந்த மதகுரு மடக்கி பிடிப்பு!

யாழில் தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையும் இளம்பெண் ஒருவரும் வீடொன்றில் தனிமையில் இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதில் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பின்னர் அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு வாடகைக்கு எடுப்பு

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்குவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு தங்கி இருந்தவர் ஆசிரியை அல்ல என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது நடத்தையில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேரங்களில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அருகிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர்.

பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

இந்த நிலையில் நேற்று மதியமும் இளம்பெண் ஒருவருடன் கத்தோலிக்க மதகுரு அங்கு வந்துள்ளார்.

அவர்கள் வீட்டுக்குள் சென்றதும் அந்தப் பகுதி பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

வீட்டுக்குள் மக்கள் சென்று பார்த்த போது அங்கு மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளன.

அத்துடன் கத்தோலிக்க மத குருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.

மதகுருவையும் அவருடன் தங்கி இருந்து யுவதியையும் பிடித்த பொதுமக்கள் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor