இலங்கையில் பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண மீளாய்வு குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.