நாட்டில் இன்றைய தினம் (31-05-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.