கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசரத் தொடர்பு இலக்கங்களான 110 மற்றும் 0112 422 222 தொழில்நுட்பப் பிழை காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவசரநிலை ஏற்பட்டால், நிலைமை சீராகும் வரை கொழும்பு தீயணைப்புப் பிரிவின் பொதுத் தொடர்பு இலக்கமான 0112 686 087 மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.