நாட்டில் மருந்துகளின் விலை குறைவடையும் சாத்தியம்

நாட்டில் எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மருந்துகளின் விலையை 10% – 15% வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் மருந்து விலை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (17) சந்திக்கவுள்ளனர்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி குறித்த தரவுகளை ஆராய்ந்து மருந்து விலைகள் திருத்தம் தொடர்பான அறிக்கையை அமைச்சரிடம் உடனடியாக வழங்கவுள்ளதாகவும் மருந்து விலை கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor