போதைப் பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது

ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிறைச்சாலை சிறைக் காவலர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இக் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸார் கைது நடவடிக்கை
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மினுவாங்கொடைப் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்த விடுதி முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலினடிப்படையில் உக்கல்பட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பெறச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் பிரகாரம், விடுதி முகாமையாளருக்கு போதைப்பொருள் வழங்கியதாக கூறப்படும் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
இதற்கமைய ராகம பகுதியைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருள் வழங்குவதும் தெரியவந்ததுள்ளது.

அதன்படி, அந்த சிறைச்சாலையின் இரண்டாம் வகுப்பு சிறைக் காவலர் கம்பஹா, கிரிதிவிட்ட பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்ட போது, அவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor