பிரிந்திருக்கும் கணவன் மனைவியை சேர்த்து வைக்கும் உப்பு!

இறை வழிபாட்டுடன், மந்திர சக்தியும் ஒன்று சேர்வதால் விரைவில் கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த எளிய பரிகாரங்கள் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் உள்ள தீயவற்றை அழித்து பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

கணவன் மனைவி பிரச்சனையா ?

இல்லறம் நல்லறமாக சிறக்க கணவன் மனைவி ஒற்றுமை என்பது மிகவும் அவசியமாகும்.

சூழ்நிலை காரணமாக சண்டை ஏற்பட்டாலும் உடனடியாக அதை மறந்து, அன்பு காட்ட வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும் என்பார்கள்.

ஆனால் இன்று வாழ்க்கையே இயந்திரமயமாகி விட்டதால் எதற்கெடுத்தாலும் சண்டை, நிம்மதி இல்லாத சூழ்நிலையே பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது.

பல வீடுகளில் வெளிஉலகிற்காக ஒரே வீட்டில் வாழ்பவர்கள் இருக்கிறார். பலர் சிறிய பிரச்சனைக்கு கூட சகிப்பு தன்மை இல்லாததால் கோபம் கொண்டு பிரிய வேண்டும் என முடிவு எடுத்து விவாகரத்து கேட்டு நிற்கிறார்கள்.

கணவன் மனைவி ஒற்றுமை

இப்படி கணவன் மனைவி சண்டை, பிரச்சனை, பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர சில எளிய பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம்.

பிரிந்திருக்கும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட நாராயணப் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்.

இதே போல் அர்த்தநாரீஸ்வரரையும் வணங்கி வந்தால் விரைவில் தம்பதிகள் ஒன்று சேரலாம்.

கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்

கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் கருத்து வேற்றுமைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவ ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பூஜை அறையில் சென்று அமைதியாக அமர வேண்டும்.

27 மிளகு, 27 கல் உப்புகளை எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு, முதலில் ஒவ்வொரு உப்பாக தண்ணீருக்குள் போட வேண்டும்.

பிறகு மிளகுகளை ஒவ்வொன்றாக போட வேண்டும்.

இவற்றை போட்டு முடித்ததும் நன்றாக வேண்டிக் கொண்டு, இந்த தண்ணீரை ஆறு, குளம் ஆகியவற்றிலோ அல்லது கால்படாத இடத்திலோ சேர்த்து விடலாம்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். கல் உப்பு மற்றும் மிளகிற்கு எதிர்மறை எண்ணங்களை மாற்றும் சக்தி உள்ளது.

வீட்டில் சூழ்ந்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் மறைந்து, தெய்வ ஆற்றல் பரவ துவங்கும். கண் திருஷ்டி போன்றவைகளும் இதனால் விலகி விடும்.

Recommended For You

About the Author: webeditor