மீண்டும் வருகிறது 7ஜி ரெயின்போ காலனி

7ஜி ரெயின்போ காலனி 2
செல்வராகவன் இயக்கத்தில் 2004ல் வெளிவந்து ஹிட் ஆன படம் 7ஜி ரெயின்போ காலனி. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தான் ரசிகர்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது செல்வராகவன் அதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறார். வரும் ஜூன் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

ஹீரோ யார்
ரவி கிருஷ்ணா தான் இந்த இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறாராம். தற்போது அவருக்கு 20 வயது கூடி இருந்தாலும், படத்திற்காக உடல் எடையை குறைத்து வருகிறாராம்.

மேலும் ஹீரோயினாக சோனியா அகர்வால் வருவாரா அல்லது வேறு ஒரு நடிகை வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Recommended For You

About the Author: webeditor