தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.
இதன்படி, நேற்றைய தினம் (07-03-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,791.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த சில தினங்களை விட நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 176,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.