யாழில் தொலைபேசி வழியாக இடம் பெறும் பாரிய மோசடி குறித்து மக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

தொலைபேசிமூலம் அழைப்பை எடுத்து அதிர்ஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் கைதுசெய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (06-03-2023) இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் பண்டாரகம அட்டுளுகம, பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

யாழ். மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு அதிர்ஷ்ட கார் ஒன்று கிடைத்துள்ளதாக Ez Case மூலம் 24 லட்சம் ரூபா மோசடி செய்து கையடக்க தொலைபேசி மூலம் உரையாடி பெற்றமை, தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின்படி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இப்படியாக பெரிய மற்றும் சிறிய தொகைகளில் ஏராளமானவர்கள் வடபகுதியில் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவருகிறது.

இவ்வாறான மோசடிக் கும்பலிடம் அகப்பட்டு ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறும், அவ்வாறான தொடர்புகள் கிடைக்கும் போது சாதுரியமாக செயற்பட்டு உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிப்பது இவ்வாறான குற்றச் செயல்களில் மேலும் ஈடுபடுபவர்களை இனம் காண உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor