எதிர்வரும் உள்ளூரட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு வெல்லாவெளி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வவுணதீவு பிரதேச சபைப் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உட்பட வெல்லாவெளி பிரதேச சபையில் கட்சியின் சார்பில் போட்டியிடும் வட்டார மற்றும் பட்டியல் வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தேர்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும், தேர்தல் பிரச்சார விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வேட்பாளர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.